
2.09.2017 அன்று புதுச்சேரி சென்று அங்கு பாரதிதாசன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்பெறும் மற்றும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ள ஆண்ட்ராய்டு அலைபேசிகளை பயன்படுத்தும் பயிற்சி வகுப்புகள் 2.09.2017 மற்றும் 3.09.2017 இரண்டு நாட்கள் சாரோன் இல்லத்தில் வைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது .இந்த பயிற்சி வகுப்பில் அவர்களுக்கு சிறந்த முறையில் கைபேசியை எப்படி பயன்படுத்தும் விதத்தையும் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியாளர்கள் ஆழியார்ரில் இருந்து திரு.ஜான் மகேந்திரன் ( தீபவிழியின் பயுற்றுனர் ) இவர் ஆண்ட்ராய்டு செயலிகள் பற்றி முழுமையான விளக்கங்களை கொடுத்தார் பாண்டிச்சேரி இல் இருந்து திரு ஆனந்த் ( தீபவிழியின் பயுற்றுனர் ) இவர் ஆண்ட்ராய்டு செயலிகள் பற்றி முழுமையான விளக்கங்களை கொடுத்தார் புதுக்கோட்டையில் இருந்து சுப்ரமணியன் அவர்கள் கல்வி தொழில்நுட்பத்தில் உள்ள பயன்பாடுகள் பற்றி முழுமையான விளக்கங்கள் கொடுத்தார். பாண்டிச்சேரி இல் இருந்து சுபா அவர்கள் கற்றல் முறைக்கு எளிமையான ( தந்திரங்கள் & குறிப்புகள் ) Tricks & Tips – களை வழங்கினர் . அதன் பிறகு சாரோன் இல்லத்தின் நிறுவனர் திரு.மோகன் அய்யா அவர்களின் ஆலோசனை வழங்கப்பட்டது. பயிற்சியின் சிறப்புகள்:
- முதலில் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் பற்றிய அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.
- ஆண்ட்ராய்டில் உள்ள செயலிகளின் பற்றிய பயன்பாடுகளும் செயல்பாடுகளும் தெளிவாக வழங்கப்பட்டது.
- அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்து தெளிவுபடுத்தப்பட்டது.
- ஆங்கிலமொழி குறித்த சந்தேகங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்த பட்டது.
- பொது அறிவை வளர்த்துகொள்ளும் ஆற்றல் பற்றி பயிற்சி கொடுக்கப்பட்டது



