
தீபவிழியுடன் தீபாவளி இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சிறப்பாக அமைந்திடும் வகையில் 10 குழந்தைகள் உள்பட 60 நபர்களுக்கு புத்தாடை ,இனிப்பு வகைகள் மற்றும் செலவின் தேவைகேற்ப தொகையும் வழங்கி இத்தீப திருநாளை மகிழ்வோடு கொண்டாடிட வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திருநாளை மகிழ்விக்கும் விதமாக அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கிய மரியாதைக்குரிய திரு. ஜவர்ஹலால் நேரு என்ற ஜவகர் அவர்களுக்கும், காசோலைகளாக வழங்கிய ABM & Group (Meenatchi Sundara Pandian Ramachandran , பாலா வாண்டையார் ,அருள் வீரையா வளன்கொண்டார் ) நிறுவனத்தாருக்கும் மற்றும் திரு.கோபிநாத் கலாநாதன், திருமதி சித்ரா சின்னுசாமி அவர்களுக்கும் தீபவிழியின் மனமார்ந்த நன்றிகள். மேலும் பாண்டிச்சேரி முதல் கோயம்புதூர் , திருப்பூர் ,சேலம் ,கரூர்,திருச்சி,புதுகோட்டை போன்ற நகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தீபவிழி உறவுகளின் இல்லங்கள் சென்று தேவையான அனைத்து உதவிகளையும் நல்கி எனக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்திய திரு மணிகண்டன் ஜோதிராமன் அவர்களுக்கும் தீபவிழியின் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் என்றும் மக்கள் பணியில் சுப்பிரமணியன் முருகையா அறங்காவலர், தீபவிழி..







