
ஆண்ட்ராய்டு அலைபேசி வழங்கும் நிகழ்ச்சி தீபவிழியின் செயல்பாடுகளில் ஒன்றான திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் நோக்கமாக கடந்த 28.07.2017 அன்று புதுச்சேரி சென்று அங்கு பாரதிதாசன் கல்லூரியில் பயிலும் மாணவர்களை சந்தித்து மேலும் அவர்களின் குடும்ப சூழ்நிலைகளை ஆராய்ந்து அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்பெறும் விதமாக அவர்களுக்கு தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி கல்விக்கு பயன்படும் விதமாக அவர்களுக்கு உரிய அண்ட்ராய்டு செயலிகள் உள்ள ஆண்ட்ராய்டு அலைபேசிகளை வாங்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது அதன் பிறகு ABM நிறுவனம் ( Meenatchi Sundara Pandian Ramachandran , பாலா வாண்டையார் , @Arul மற்றும் தீப விழியின் அறங்காவலர் கோபிநாத் கலநாதன் ( Kopinath Kalanathan ) ஆகியவர்களின் உதவியுடன் ஐந்து ஆண்ட்ராய்டு அலைபேசி வாங்கி 2.09.2017 அன்று சாரோன் இல்லத்தில் வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் பெரும் பயன்கள் ஆடியோ பதிவுகளை அவர்கள் எளிமையாக கேட்டு பயன்பெற முடியும். பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கு என வாட்ஸ் ஆப் குருப் தொடங்கி அவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வுக்கான முடியும். அவர்களுக்கு (பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கு ) என்று உள்ள ஆண்ட்ராய்டு செயலிககளை பயன்படுத்தி கற்றலின் முறையை எளிமைப்படுத்தலாம். அவர்களின்(பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கு ) திறமைகளை எளிமையாக வெளி உலகிற்கு கொண்டு வரலாம். ஆர்வம் உள்ள நபர்கள் அவர்களின் பாட புத்தகங்களை வாசித்து ஆடியோவாக அவர்களுக்கு அனுப்பலாம். இது போன்ற இன்னும் நிறைய செயல்பாடுகள் உள்ளன. மொத்தத்தில் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் தன்னபிக்கைக்கு உதவும் வகையிலும் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையிலும் தீப விழியின் செயல்பாடுகள் இருக்கும். “இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு” “முயன்றதை செய்வோம் முடியாதவர்களுக்கு” தீபவிழி- இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம் இது பார்வையற்றோருக்கான பாசக்கரங்களால் உருவானது மேலும் விவரங்கள் : http://deepavizhi.org/mobile-sponsored-bharathidasan....




